(திருப்பெருந்துறையில் பாடியது)
இன்று ஆவுடையார் கோயில் என்றுதான் அன்றைய திருப்பெருந்துறை. சிவபெருமான் இவ்விடத்தில் நற்குரு வடிவில் மாணிக்கவாசகருக்குக் காட்சி தந்து அருளினார். அதனால் பெருமகிழ்ச்சி கொண்ட மாணிக்கவாசகர், சிவபெருமானின் பெருஞ்சிறப்பைப் பக்தியோடு பாடினார். இது ‘சிவபுராணம்’ எனப்படும். இது 95 அடிகளைக் கொண்டது.
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அனேகன் இறைவன் வாழ்க
விளக்கவுரை: ‘நமச்சிவாய’ எனும் மந்திரத்தை வணங்குகின்றேன். சிவபெருமானின் திருவடிகளை வணங்குகின்றேன். கண் இமைக்கும் நேரமும் எனது உள்ளத்திலிருந்து நீங்காதவனுடைய திருவடிகளை வணங்குகின்றேன். கோகழி தலத்தை ஆட்சி செய்து அருளிய சிவகுருநாதனின் திருவடிகளை வணங்குகின்றேன். சிவாகம நூற்பொருளாய் நின்று, அவ்வாகம நெறியைப் பின்பற்றும் அடியவரை அணுகி அருள்செய்பவனுடைய திருவடிகளை வணங்குகின்றேன். தனக்குத்தானே ஒருவனாகவும் பலராகவும் விளங்குகின்ற சிவபெருமானின் திருவடிகளை வணங்குகின்றேன்.
சொற்பொருள்: வாழ்க – வணங்குகின்றேன். ஆகமம் – தெய்வநூல். தாள் – திருவடி. நாதன் – இறைவன்; இங்கு சிவபெருமானைக் குறித்தது. இமைப்பொழுதும் – கண் இமைக்கும் நேரமும். கோகழி – திருக்கோகர்ணம் என்னும் திருத்தலம். ஏகன் – ஒருவன்.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகத்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
காருங்குவார் உள்ளிழுக்கும் கோளாழ்கல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க
விளக்கவுரை: ஆணவ வேட்கையை முழுவதுமாக ஒழித்து என்னை ஆட்கொண்ட அரசனின் இணையடிகள் வெல்வதாக! பிறப்பைப் போக்கும் சிவபெருமானின் சிலம்பணிந்த திருவடிகள் வெல்வதாக! தன்னைப் புறக்கணிக்கும் அடியவர்களையும் தன் பக்கம் ஈர்க்கும் அருள்மிக்க திருவடிகள் வெல்வதாக! தம்மிடம் அன்பில்லாதவரையும் தன்னை நெருங்காதவரையும் தலை வணங்கச் செய்யும் பெருமை கொண்ட திருவடிகள் வெல்வதாக!
தன்னிடம் அன்பில்லாதவராயும் தன்னை நெருங்காதவராயும் இருப்பவர்களுக்குத் தொலைவில் இருப்பவனுடைய மெய்யான திருவடிகள் வெல்வதாக! இரு கைகளையும் குவித்து தன்னை வணங்கும் அடியவர்களின் அன்பைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து தலைவணங்கச் செய்யும் சிவபெருமானின் திருவடிகள் வெல்வதாக! தம்முடைய தலைவணக்கத்தால் தன்னை வணங்கும் அடியவரை உயர்வைப் பெறச் செய்யும் பெருமை கொண்டவனுடைய திருவடிகள் வெல்வதாக!