சொற்பொருள் : வேந்தன் – அரசன். இங்கு சிவபெருமானைக் குறித்தது. பிஞ்ஞகன் – தலையில் பிறையைக் கொண்ட சிவபெருமான். சிவபெருமான் தம் தலையில் கொன்றை மலரை அணிந்தவன். பிறையையும், கங்கையையும் தரித்தவன். சேயோன் – தொலைவில் இருப்பவன். இங்கு சிவபெருமானைக் குறித்தது. சிரம் – தலை. சீர் – பெருமை. கழல் – திருவடி.

ஈசனடி போற்றியெந்தை அடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
சீரார் பெருந்துறையம் தேவனடி போற்றி

விளக்கவுரை : யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானின் திருவடிகளுக்கு வணக்கம். எமக்குத் தந்தையாக விளங்குபவனுடைய திருவடிகளுக்கு வணக்கம். ஒளிவடிவில் திகழும் இறைவன் திருவடிகளுக்கு வணக்கம். சிவபெருமானின் சிவந்த திருவடிகளுக்கு வணக்கம்.

தம்மை வணங்கும் அடியவர்களின் அன்பில் நிலைபெற்று விளங்கும் தூயவனின் திருவடிகளுக்கு வணக்கம். மாயமாகிய பிறப்பை அறுக்கும் மன்னவனுடைய திருவடிகளுக்கு வணக்கம். பெருமை பொருந்திய திருப்பெருந்துறை என்னும் திருத்தலத்தில் விளங்கும் நம்முடைய தெய்வத்தின் திருவடிகளுக்கு வணக்கம்.

சொற்பொருள் : சசன் – இறைவன். இங்கு சிவபெருமானைக் குறித்தது. எந்தை – என் தந்தை. சேவடி – செம்மையான திருவடி. நிமலன் – தூயவனாகிய இறைவன். சீர் – பெருமை. பெருந்துறை – திருப்பெருந்துறை என்னும் சிவத்தலம்.

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவனின் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்பான்

விளக்கவுரை : தெவிட்டாத பேரின்பத்தைத் தம்முடைய அடியவர்க்கு அருளும் மலை போன்றவனுக்கு வணக்கம். சிவபெருமான் என்னுடைய எண்ணத்தில் என்றும் நிலைபெற்றவன் என்பதால், சிவபெருமானின் திருவருளாலே அவனுடைய திருவடிகளைப் பணிந்து, அவனுடைய உள்ளம் மகிழ்ச்சி அடைவதற்காக, ‘சிவபுராணம்’ என்னும் சிவபெருமானின் பழமையான வரலாற்றை நான் முன்பு செய்த வினைகள் யாவும் என்னை விட்டு விலகுமாறு நான் கூறுவேன்.

‘சிவபுராணம்’ என்னும் சிவபெருமானின் பழமையான வரலாற்றை, நான் முன்பு செய்த வினைகள் யாவும் என்னை விட்டு விலகுமாறு நான் கூறுவேன்.

சொற்பொருள் : ஆராத – தெவிட்டாத. முந்தை – இதற்கு முன் உள்ள பிறவி. உரைப்பன்பான் – கூறுவேன்.

கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பேரருள்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேனே

விளக்கவுரை : நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமானின் திருவருட் பார்வை எனக்கு வழிகாட்டவும், அவ்வருளே நானும் வந்தடைந்து, சிந்தித்துப் பார்ப்பதற்கு எட்டாத அழகிய அவனுடைய திருவடிகளை வணங்கி, விண்ணுலகமும் மண்ணுலகமும் நிறைந்து, அவற்றுக்கு அப்பாலும் பொருந்தி விளங்குபவனே! ஒப்பற்ற ஒளியாய், எண்ணிக்கைக்கு எட்டாதவனே! உன்னுடைய பேரருளையும் சிறப்பையும் பொல்லாத வினையுடைய நான் எவ்வாறு புகழ்வேன் என்பதை அறியேன்.