அக்கமாம் அளவிறுதி பல்லார்ப் அணைத்தனக்கும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்னொழும்பின்
நாற்றத்தின் நேரிய சேயாய் நணியினையே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே

விளக்கவுரை : தோற்றம், எல்லை, இறுதி – இவை மூன்றும் இல்லாதவனே! உலகங்கள் அனைத்தையும் படைப்பாய்; காப்பாய்; அழிப்பாய்; அவற்றுக்குத் திருவருள்வாய்; பிறவியினின்று பெருநெறியைப் போக்குவாய்; என்னை உன்னுடைய அடியவர் கூட்டத்தில் சேர்ப்பாய்; உன்னை அடைவதற்காகச் சிறந்த வழி காட்டுவாய்! உன்னை விரும்பும் வணங்குதற்குத் தொலைவில் இருப்பவனே! விரும்பும் வணங்குவோர்க்கு விரைவில் அருள்பவனே! மொழிக்கும், மனத்திற்கும் எட்டாமல் விளங்குகின்ற வேத வடிவினனே!

சொற்பொருள் : ஆக்கம் – தோற்றம், அழிவு – எல்லை, இறுதி – முடிவு, தொழும்பு – அடியவர் கூட்டம். சேயாய் – தொலைவில் இருப்பவனே. நணியாய் – அருகில் இருப்பவனே.

கறந்தபால் கண்ணலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

விளக்கவுரை : கறந்த பாலில் கரும்புச்சாறும் நெய்யும் கலந்ததுபோல, மேலான அடியவர் தம் எண்ணத்தில் தேன்போன்று இனிப்பாய் இருப்பவனே! பிறப்பை அழிக்கும் எங்கள் பெருமானே! ஐந்து நிறங்களையும் உடையவனே! விண்ணுலகத் தேவர்கள் உன்னைப் போற்றியும், அருளைப் பெற முடியாமல் மறைந்திருந்தாய். என் வல்வினைகளைப் போக்கி என்னை ஆட்கொள்!

சொற்பொருள் : கண்ணல் – கரும்பு. எத்த – வணங்க. மறைந்திருந்தாய் – வெளிப்படாமல் இருந்தாய்.

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

விளக்கவுரை : மறையும் படி மூடிய மாய இருளான உடலினை, நல்வினை தீவினை என்னும் கயிற்றால் கட்டி, வெளித்தோலால் போர்த்தி, உள்ளே புழு, அழுக்கு முதலியவற்றால் நிரம்பிய உடம்பினை, ஒன்பது வாயில்கள் கொண்ட குடிலாக அமைத்து, ஐம்புலன்களும் மயங்கச் செய்து, வஞ்சனை செய்யும் தன்மையை இறைவன் அறிவிக்கின்றான்.

சொற்பொருள் : மறைந்திட – மறைதற்காக. புறந்தோல் – வெளித்தோல். குடிலை – ஒன்பது வாயில்கள் கொண்ட உடல்.

விலங்கும் மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்